'சர்கார்' படத்தை தொடர்ந்து... அடுத்ததாக விஜய் அட்லீ இயக்க உள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் கதையை எழுதி முடித்து விட்ட அட்லீ கடந்த 14 ஆம் தேதி இந்த படம் குறித்து அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

'சர்கார்' படத்தை தொடர்ந்து... அடுத்ததாக விஜய் அட்லீ இயக்க உள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் கதையை எழுதி முடித்து விட்ட அட்லீ கடந்த 14 ஆம் தேதி இந்த படம் குறித்து அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மேலும் இதனை இந்த படத்தை தயாரிக்க உள்ள ஏஜிஎஸ் நிறுவனமும் அறிக்கை வெளியிட்டு உறுதி செய்தது. ஏற்கனவே இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்றும், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் என தெறி, மற்றும் மெர்சல் படங்களில் பணியாற்றிய கலைஞர்களே பணியாற்றுவார்கள் என கூறப்பட்டது.

மேலும் இந்த படத்தில்... விஜய்யுடன் இணைத்து காமெடி நடிகர் விவேக் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்நிலையில், கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட விவேக்கிடம், ‘தளபதி 63 படத்தில் நடிக்கிறீர்களா?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய வேள்விக்கு, ‘நிச்சயமாக நடிக்கிறேன்’ என அவர் பதிலளித்துள்ளார்.

இதன் மூலம் ‘நேருக்கு நேர்’, ‘குஷி’, ‘ஷாஜகான்’, ‘யூத்’, ‘திருமலை’ என இதற்கு முன் 11 படங்களில் இணைத்து நடித்துள்ள இவர்கள், 12 ஆவது முறையாக முறையாக இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த திரைப்படம் அடுத்த வருடம் (2019) தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று பரவலாக தகவல்கள் வெளியாகி வந்தாலும் இது குறித்து எந்த அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.