அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி விவேக் என்ன செய்கிறார் தெரியுமா........???

தமிழனாக பிறந்த அனைவரையும் பெருமை பட வைத்தவர் அப்துல்கலாம் அவர்கள். அவருடைய ரசிகன், தீவிர பக்தன் என்று கூட சொல்லலாம் நடிகர் விவேக்கை.

எப்போதும் சேவை மனப்பான்மையுடன் சமூகத்திற்காக நிறைய விஷயங்களை செய்யும் விவேக் தற்போது புது முயற்சியை கையில் எடுத்திருக்கிறார்.

அக்டோபர் 15ம் தேதி அப்துல்கலாம் அவர்கள் பிறந்த நாள் வருவதை யொட்டி அவருடைய உருவம் மற்றும் வாசகம் பொறித்த ஸ்டிக்கர்களை எல்லா ஆட்டோக்களிலும் ஒட்டி அழகு பார்த்து வருகிறார்.

இது பற்றி மேலும் அவர் கூறியபோது அணைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் அப்துல்கலாம் ஐயாவை தனது தந்தையாகவே பார்க்கின்றனர் என பெருமிதத்தோடு கூறியுள்ளார்.