தமிழில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் நடிகர் விவேக்... தன்னுடைய காமெடியில் கூட 'மக்களுக்கு ஏதேனும் கருத்துக்களை கூறும் வகையில் காமெடி செய்பவர். 

தற்போது அதிகமான படங்களில் இவர் நடிக்காவிட்டாலும், அவ்வப்போது... சமூக பிரச்சனை சார்ந்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். 

விவசாயம் - சினிமா:

இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பகுதியில் தமிழகத்தில், விவசாயம் மற்றும் சினிமா ஆகிய இரண்டும் இறந்துக்கொண்டிருப்பதாகவும், இந்த இரண்டையும் அதில் இருந்து மீட்க அரசு தலையிட்டு காப்பாற்ற வேண்டும் என்றும் நடிகர் விவேக் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும் வறண்ட நீர்நிலை, காணாமல் போன ஆறுகள், மற்றும் மரங்கள், மீத்தேன் போன்ற திட்டங்கள் இதை அழிப்பது. வரைமுறை அற்ற வெளியீடு, fdfs இணைய விமர்சனங்கள், கட்டண உயர்வு, சம்பள உயர்வு போன்ற பல்வேறு விஷயங்களில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.