viveham tesar updated news

தல அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் டீசர், இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. இந்த டீசரை பார்க்க பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஏற்கனவே அஜித் கடைசியாக நடித்த வேதாளம் படத்திற்கு பிறகு, தெறி, கபாலி, பாகுபலி ஆகிய படங்களின் டீசர் வெளியாகி அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டும் ஷேர் செய்யப்பட்டும் சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த சாதனைகளை முறியடிக்கும் வகையில் அஜித் ரசிகர்கள் தங்களுக்குள் ஒரு சில விதிகளை கடைபிடிக்க உள்ளதாக ட்விட்டரில் மூலம் கூறி வருகின்றனர். அதில் அவர்கள் கூறியுள்ளது...

டீசரை டவுன்லோட் செய்யாதீர்கள், இதை வாட்டஸ் ஆப், ட்விட்டர் ஆகியவற்றில் பதிவிடாதீர்கள். டீசர் லிங்கை மற்றும், பேஸ் புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் ஆகியவற்றில் பதிவிடுங்கள்.

பாகுபலி, தெறி, கபாலி, ஆகிய படங்களின் சாதனையை நாம் முறியடிக்க வேண்டும். நாம் அனைவரும் யூ டியுபில் மட்டுமே நாம் பார்க்க வேண்டும், அதோடு லைக்கும் செய்ய வேண்டும்.

இதனை அனைவரும் மதிக்க வேண்டும், பரப்ப வேண்டும், எங்கும் பகிர வேண்டும் மே 11 டீசர் நாள். என சபதம் எடுத்துக்கொண்டுள்ளனர்.