vivegam releasing in more theatres
இயக்குனர் சிவா இயக்கத்தில், அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் 'விவேகம்'. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான நாள் முதலே அஜித் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், எத்தனை திரையரங்குகளில் விவேகம் வெளியாக உள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 1090 திரையரங்கங்கள் உள்ளது, இவற்றில் 900 திரையரங்குகளுக்கு மேல் விவேகம் திரைப்படம் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி பார்த்தல் எப்படியும் 95 % திரையரங்கங்களில் வெளியாகும்.
ஏற்கனவே தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் என்றும், அதிக வசூல் செய்த திரைப்படம் என்றும் பாகுபலி ஏற்படுத்தியுள்ள சாதனையை, விவேகம் முறியடிக்குமா... பொறுத்திருந்து பாப்போம் ...
