‘600 தியேட்டர்களுக்கும் மேல் ‘பேட்ட’ படத்தைத் திரையிட்டிருக்கும் எங்களுக்கே இன்னும் முறையாக வசூல் கணக்குகள் வந்து சேரவில்லை. அதற்குள் ‘பேட்ட’நஷ்டம், ‘விஸ்வாசம்’ ஹிட்டுன்னு போடுறீங்களே’ என்று மிகப்பரிதாபமாக தனது ட்விட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் செய்தி வெளியிட்டபிறகுதான் 100கோடி, 200 கோடி பார்ட்டிகள் கொஞ்சம் அடக்கிவாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

பட ஓட்டத்தை விட்டுத்தள்ளுங்கள். பட விளம்பரம் தொடர்பாக மீடியா பக்கமே வரமாட்டேன் என்று வறட்டுப்பிடிவாதம் பிடிக்கும் அஜீத் இந்த முறை ரஜினி என்னும் யானையை மீடியாக்கள் பதுங்கி இருந்து சாய்த்துவிட்டார் என்பதுதான் உண்மை. ரஜினியை வீழ்த்த அவர் இவ்வளவு முனைப்பு காட்டக்காரணம் இதன் மூலம் விஜய், சூர்யா,விக்ரம்,விஷால் என்று எல்லோருமே தன்னாலேயே பின்னால் போய்விடுகிறார்கள் என்கிற கணக்குதான்.

முதல் நாள் தனது மாஸ்தான் படத்துக்கு ஓப்பனிங் கொடுத்தது என்று புரிந்துகொண்ட அஜீத், அது மேலும் தொடர ஒரே காரணம் படத்தில் ஒர்க் அவுட் ஆகியிருக்கும் அப்பா-மகள் செண்டிமெண்ட்தான் என்பதைப் புரிந்துகொண்டு, தனது இணையதள விஸ்வாசிகளிடம் அந்த ரூட்டில் பயணிக்கச் சொன்னார்.

விஸ்வாசிகள் விடுவார்களா முழுக்க முழுக்க படத்தில் அஜீத் அவரது மகள் அனிகா செண்டிமெண்ட் சமாச்சாரங்களைக் கையில் எடுத்துக் கொண்டு எத்தனை அப்பாக்களும், எத்தனை மகள்களும் படத்தை பார்த்து அழுதார்கள் என்று புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து, தாங்களும் அழுதபடியே வைரலாக்க ஆரம்பித்தார்கள். தியேட்டர்களில் ஐஸ்க்ரீம், பாப்கார்ன்  கேட்டு அழுத பிள்ளைகளையும் இதில் சேர்த்துக்கொண்டார்கள் என்பதுதான் காலக்கொடுமை.