அஜீத் எதிர்பார்த்தது போலவே ‘பேட்ட’ ட்ரெயிலர் 24 மணி நேரத்தில் செய்த சாதனையை ‘விஸ்வாசம்’ பனிரெண்டே மணி நேரத்தில் முறியடித்திருக்கிறது. இது ஒன்றும் தற்செயலான நிகழ்வல்ல, சில மாதங்களாக அஜீத் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி வைத்த பிளான் அது.

‘ரெண்டாவது இடம் தமிழ்ல எனக்குப் பிடிக்காத கெட்டவார்த்தை’ என்று சில காலமாகவே மைண்ட் வாய்ஸில் கர்ஜித்து வந்த அஜீத், அதை ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் செயல்படுத்த முடிவெடுத்தே தயாரிப்பாளரின் எதிர்ப்பு மற்றும் ஆலோசனைகளை மீறி பேட்ட ரிலீஸாகும் அதே தேதியில்தான் விஸ்வாசமும் ரீலீஸாகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அதே போல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தொடங்கி ட்ரெயிலர் வரை பேட்டக்கு அடுத்துதான் ரிலீசாகவேண்டும். அது பேட்ட ரீச்சை விட அதிகமாக இருக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதைச் செய்யவேண்டும் என்பதில் வெறியாக இருந்தார். அதைச் செயல்படுத்த இணையங்களில் பெரிய விலைகொடுத்து ஒரு டீம் நியமிக்கப்பட்டது. நேற்று 12 மணி நேரத்தில் ஒரு கோடி என்ற இமாலய சாதனையின் பின்புறம் இருந்தது இந்த டீம்தான்.

இதனால்தான் பேட்ட ட்ரெயிலர் ரிலீஸான பிறகும் கூட தேதி அறிவிக்காமல் இருந்ததைக் கண்டு கொதித்த தனது ரசிகர்களை விஸ்வாசம் டீம் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. தற்போது அஜீத்தின் அண்டர்கிரவுண்ட் பிளான் ஏற்கனவே நல்லபடியாக ஒர்க்-அவுட் ஆகியிருக்கும் நிலையில் பாக்ஸ் ஆபிசில் ‘பேட்ட’ படத்தின் பெண்டைக் கழட்டி சூப்பர் ஸ்டாரை ஓவர்டேக் பண்ணி ஒர்ஜினல் அல்டிமேட் ஸ்டார் ஆவதுதான் அஜித்தின் பிளான்.