தல அஜித், 'விஸ்வாசம்' படத்தில் வேஷ்டியை மடித்து கட்டி கிராமத்து கெட்டப்பில் நடித்து கலக்கி இருக்கிறார். பொதுவாக கிராமத்து கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதிலும் அஜித் படம் என்றால் சொல்லவே வேண்டாம்.

இந்நிலையில் 'விஸ்வாசம்' படத்தில் நடித்துள்ள 3 லெஜெண்ட்ஸ் நடிகர்கள் பற்றி விக்கி பீடியா பக்கத்தில் வெளியாகி. படக்குழு ரகசியமாக வைத்திருந்த தகவல் தற்போது புஸ்வானம் ஆகிவிட்டது.

அவர்கள் யார் யார் தெரியுமா? 80 களில் முன்னணி ஹீரோக்களாக நடித்து வந்த நடிகர் பிரபு, சத்யராஜ், மற்றும் ராஜ் கிரண் ஆகியோர் தான். ஏற்கனவே இந்த படத்தில் நடித்த பல நடிகர்கள் பற்றி தகவல் வெளியான போது கூட இந்த 3 லெஜெண்ட்ஸ் நடிகர்கள் பற்றி படக்குழு ரகசியம் காத்து வந்த நிலையில் விக்கி பீடியா இப்படி ஒரே நிமிடத்தில் ரகசியத்தை உடைத்து விட்டது. 

இவர்களை தவிர இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.