‘அடுத்து ஒரு தெலுங்குப் படம் இயக்குகிறார். இல்லையில்லை ரெண்டு வருடமானாலும் பரவாயில்லை காத்திருந்துவிட்டு மீண்டும் அஜீத்தை வைத்தே இயக்குகிறார் என்பதாக நடமாடிவந்த இரு தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இயக்குநர் ‘விஸ்வாசம்’ சிவா.

ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கு கார்த்திக் சுப்பாராஜ் வாங்கிய அளவுக்கு வக்காலத்து எதுவும் வாங்காமல் ஓரளவுக்கு ஒதுங்கியே இருந்த சிவா, மீண்டும் அஜீத்தை வைத்தே படம் இயக்கப்போகிறார் என்கிற தகவல்கள் சர்வசாதாரணமாக நடமாடின. ஆனால் போனிகபூர் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக வரும் படச்செய்திகள் எதையும் நம்பவேண்டாம் என அஜீத்தின் மேனேஜர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவை கடந்த வாரம் அவரது இல்லத்தில் சந்தித்து, சூர்யாவும், அவரது சகோதரர் கார்த்தியும் இணைந்து நடிக்கும் டபுள்ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றைச் சொல்லியிருக்கிறாராம். இதற்கு சூர்யா தரப்பில் உடனே டபுள் ஓகே சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இதே சிவா இயக்கத்தில் ‘சிறுத்தை’ படத்தில் நடித்திருந்ததால் ‘அண்ணனுக்குப் பிடிச்சிருந்தா எனக்கும் ஓ.கே’ என்று ஏற்கனவே கிரீன் சிக்னல் காட்டியிருந்தாராம் கார்த்தி.