தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் அஜித். இவர் நடிப்பில் விஸ்வாசம் படம் வரும் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர். விஸ்வாசம் படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் பெயர் தூக்கு துரை, இதை நேற்று வெளிவந்த மோஷன் போஸ்டரிலும் தெரிவித்து இருந்தனர். தற்போது தூக்கு துரை என்றால் என்ன, யார் அது என்று விசாரிக்கையில் மதுரை பக்கம் உள்ள காவல் தெய்வம் தான் தூக்கு துரையாம், இதை ரசிகர்கள் கண்டுப்பிடித்து பகிர்ந்து வருகின்றனர், 

இயக்குனர் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’அடுத்த பொங்கல் பண்டிகை அன்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்துடன் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஸ்வசம் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி இருந்தது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மூலம் அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் ‘தூக்குதுரை’ என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், உண்மையில் தூக்குத்தூரை என்பது யார்? அவரது வரலாறு என்ன என்பது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் வாழ்ந்த சிங்கம்பட்டி ஜமீன்தார்கள் தங்கள் அரண்மனையின் பின்புறம் ஒரு கோவிலை கட்டி வணங்கி வந்தனர். அந்த கோவிலில் முறுக்கு மீசை, தலையில் முண்டாசு என கம்பீரமாக உள்ளது தூக்குதுறையின் சிலை. இந்த மகாதேவர் கோவிலில் உள்ள ஒரு தூணில் தூக்குதுரை என்ற பெரியசாமி தேவர் சிலை வடக்கு நோக்கி உள்ளது. முறுக்கிய மீசை, மிடுக்கான தோற்றம், தீர்க்கமான கண்கள், தலைப்பாகையுடன் காட்சியளிக்கும் இவர், சிங்கம்பட்டி ஜமீனின் 24வது பட்டம் ஆவார். 

இவர் சிறை பிடிக்கப்பட்ட தனது நண்பனை காப்பாற்ற சிறை காவலரை கோலி செய்த குற்றத்திற்காக தூக்கு தண்டனையை ஏற்றவர் தான் இந்த தூக்கு துறை. இவரது தியாகத்தை பாராட்டி இவரை கடவுளாக வணங்கி வருகின்றனர்.

இதுவரை தூக்குதுரை என்றால் யார் என்றே பலருக்கு தெரியாமல் இருந்த நிலையில் தற்போது இந்த பெயர் கூகுளில் வைரலாகி வருகிறது. 'விஸ்வாசம்' படத்தின் கதையும் இந்த நிஜ தூக்குதுரை கதையா? என தற்போது பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது