படிக்கிறவர்களுக்குப் பைத்தியம் பிடிக்கிற அளவுக்கு ‘விஸ்வாசம்’ பற்றிய செய்திகளை நூற்றுக் கணக்கில் எழுதி முடித்திருந்தாலும் அஜித் தரப்பில் துவங்கி விநியோகஸ்தர்கள் தரப்பு வரை புதுசு புதுசாய் எதையாவது கிளப்பிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

இப்படம் பற்றிய லேட்டஸ்ட் பரபரப்பு 50 வது நாளன்று ஒரு தியேட்டர் நடத்தவிருக்கும் வசூல் வேட்டை. ரஜினியின் ‘பேட்ட’ படத்தை வீழ்த்திவிட்டோம். வாங்க 50வது நாளை ஆரவாரமாகக் கொண்டாடுவோம் என்கிற தொனியில் வரும் பிப்ரவரி 28ம் தேதி அனைத்து ஸ்கிரீனிலும் ‘விஸ்வாசம்’ படம் மட்டுமே இப்பவே டிக்கட் புக் பண்ணுங்க’ என்று வித்தியாசமான வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது கோயம்பேடு ரோகினி திரையரங்கம்.

இதுகுறித்து அத்தியேட்டர் நிர்வாகம் ‘Rohini SilverScreens @RohiniSilverScr Get ready #Thala fans #Viswasam Blockbuster 50th Day celebrations at @RohiniSilverScr on Feb 28th. Bookings open today by Feb PM! #Viswasam50AtRohini’ என்றொரு ட்விட்டும் வெளியிட்டுள்ளது.

படம் 50 வது நாளை எட்ட இன்னும் மூன்று வாரங்கள் இருக்கும் நிலையில் ரசிகர்களை எப்பிடி தினுசு தினுசா உசுப்பேத்தி சம்பாதிக்கிறாங்க பாருங்க.