இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், தல அஜித் நான்காவது முறையாக கைகோர்த்துள்ள திரைப்படம்...   'விஸ்வாசம்'. 

இந்த  படத்தின்  படப்பிடிப்பு 80 சதவீத முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தில் அஜித் அவருடைய  டப்பிங் பணியை  முடித்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் படப்பிடிப்பு மட்டுமே இன்னும் படமாக்கப்பட பட உள்ளதாகவும், இந்த படப்பிடிப்பும் வரும் வாரம் மும்பையில் நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் இரண்டாவது லுக் இன்று அல்லது நாளை வெளிவரும் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் செகண்ட்லுக் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு பற்றி வெளியிட்டு சரகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் படக்குழுவினர்.  

அதாவது அக்டோபர் 25ஆம் தேதி நாளை காலை 10 மணிக்கு இந்த படத்தின் செகண்ட்லுக் வெளியாகவுள்ளது. ஏற்கனவே வெளிவந்த ஃபர்ஸ்ட்லுக் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த இரண்டாவது லுக்கையும் உலக அளவில் டிரெண்ட் ஏற்படுத்த அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்றே கூறலாம்.