அஜீத் ரசிகர்களின் பேராவலுக்கு இடையே இன்று அதிகாலை ரிலீசாகி இருக்கிறது விசுவாசம் திரைப்படத்தில் ஃபஸ்ட் லுக். விவேகம் படத்திற்கு பிறகு அஜீத் நடிப்பில் தயாராகிவரும் இந்த திரைப்படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடைத்திருக்கிறார். 8 ஆண்டுகளுக்கு பிறகு அஜீத் மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இன்று காலை ரிலீசாகிய விசுவாசம் படத்தின் ஃபஸ்ட்லுக் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்போதிருக்கும் இண்டெர்னெட் யுகத்தில் இணையத்தில் ரிலீசாகும் ஃபஸ்ட் லுக் எந்த அளவிற்கு டிவீட் மற்றும் ரீட்வீட்டுகளை பெறுகிறது என்பதை வைத்து தான் ஃபஸ்ட் லுக் செய்திருக்கும் சாதனை வரையறுக்கப்படும்.


இதனால் விசுவாசம் ஃபஸ்ட் லுக்கிற்காக காலை முதலே ஆவலுடன் காத்திருக்கின்றனர் அஜீத் ரசிகர்கள். ஃபஸ்ட் லுக் ரிலீசான அடுத்த நொடியே, ட்வீட்டுகளாலும் , ரீட்வீட்டுகளாலும் நிறைத்திருக்கின்றனர் ரசிகர்கள். இதனால் இந்த ஃப்ஸ்ட் லுக் ரிலீசான ஒரு நிமிடத்திலேயே 7000க்கும் மேல் ரீட்வீட்டுகளை பெற்று சாதனை படைத்திருக்கிறது.

இந்த சாதனை இன்னும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இமானின் இசையமைப்பில், பல முன்னணி நட்சத்திரங்களின் பங்களிப்பில் பிரம்மாண்டமாக தயாராகிவரும் இந்த படம் விவேகம் படத்தை விட மாஸான ஹிட் கொடுக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.