தல அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் 'விஸ்வாசம்' திரைப்படம் சொன்னபடி பொங்கல் திருநாள் அன்று வெளியாகுமா என ரசிகர்கள் மனதில் ஒரு சந்தேகம் இருந்த நிலையில், தற்போது அதனை தீர்க்கும் விதமாக எந்த ஏரியாவில் யார் விநியோகஸ்த்தர் என்கிற பெயர் பட்டியல் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன்படி சென்னையில் எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனமும், செங்கல்பட்டில் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும், கோவையில் வால்மார்ட் பிலிம்ஸ் நிறுவனமும், திருச்சியில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமும், சேலத்தில் ஃபைவ் ஸ்டார் செந்திலும், நெல்லை-குமரியில் ஸ்ரீராஜ் பிலிம்ஸ் நிறுவனமும், மதுரையில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் நிறுவனமும் வட ஆற்காடு- தென்னாற்காடு பகுதியில் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்களுக்கு இருந்த முழு சந்தேகமும் நீங்கி, பொங்கல் திருவிழாவில் அஜித் மற்றும் நயன்தாராவை பார்க்க இப்போதே தயாராகிவிட்டனர்.