vishwaroopam triler release
நடிகர் கமலஹாசன் பிறந்தால் நவம்பர் 7 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பலரும் அது கண்டிப்பாக அவரின் அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பாகத் தான் இருக்கும் என்று கூறி வருகின்றனர்.
கமலஹாசனும் கடந்த சில தினங்களாக அரசியலுக்கு அச்சாணி போடுவது போன்ற பல விஷயங்களை செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில் அவருடைய பிறந்த நாள் அன்று, கமலஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் வெளியாக வாய்ப்பு உள்ளதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரன் கூறியுள்ளார்.
இது குறித்து சமீபத்தில் அவர் பேட்டியில் கூறுகையில், விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் தயாராகிவிட்டதாகவும், அருமையாக வந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நவம்பர் மாதம் வெளியிட நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்படிப் பார்த்தால் நவம்பர் மாதம் உலக நாயகன் பிறந்த நாளும் வருவதால் அன்றே இந்தப் படத்தில் ட்ரைலர் வெளியாக நிறைய வாய்ப்புகள் உள்ளது. 2015ஆம் ஆண்டிற்கு பின் கமல் நடித்த படத்தின் ட்ரைலர் வெளியாவதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.
