'ராட்சசன்' படத்தின் வெற்றிக்கு பிறகு, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'சிலுக்குவார் பட்டி சிங்கம்' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதை தொடர்ந்து, தற்போது வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். அந்த வகையில் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில், எப்.ஐ.ஆர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில், நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.  டைட்டிலுக்கு கீழே பைசல், இப்ராஹிம், ரியாஸ் என மூன்று இஸ்லாமிய பெயர்களை குறிப்பிட்டு, மேலும்  "ஐ.எஸ்.அமைப்பை சேர்ந்த சென்னை வாலிபர்கள் கைது" போன்ற செய்திகள் அச்சிடப்பட்ட சில வரிகளும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

இதனை வைத்து பார்த்தல், இப்படம் தீவிரவாதிகளின் கதையை என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மேலும் விஷ்ணு விஷால் முகத்தில், கண் மட்டும் தெரியும்படி, துணியால் முகத்தை மூடியுள்ளார்.  இந்த படத்தின் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை மஞ்சிமா மோகன் நடிக்கிறார். இந்த படத்தை சுஜாதா என்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் ஆனந்த் சாய் என்பவர் தயாரிக்கிறார். விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.