நடிகர் விஷ்ணு விஷால் அவருடைய காதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்ய உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது திரையுலகினர் மற்றும் இன்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் அவருடைய காதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்ய உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது திரையுலகினர் மற்றும் இன்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஷ்ணு விஷால்... தற்போது வளர்ந்துவரும் கதாநாயகர்களுல் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ராட்சஷன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு... வசூலிலும் கலக்கியது.

இவர் கடந்த 2011-ம் ஆண்டு கல்லூரியில் தன்னுடைய ஜூனியரான ரஜினி நடராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஆர்யன் என்கிற ஆண் குழந்தையும் உள்ளது. 

தற்போது திருமணத்திற்கு முன்பு 4 வருடங்கள் காதலித்து திருமணம் செய்த காதல் மனைவி ரஜினியும் நானும் மனதார பிரிகிறோம் என்கிற பதிவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய விவாகரத்தை உறுதி செய்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். 
இந்த விவாகரத்து குறித்து அவர் கூறியுள்ளது... 

"வருத்தத்தோடு எங்களுடைய உறவை முடித்து கொள்கிறோம் ம்... அதேபோல் நாங்கள் எப்போதுமே எங்களுடைய மகனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்த்துள்ளோம் .

நாங்கள் இருவரும் இத்தனை வருடம் மிகவும் அழகான வாழ்க்கையை வாழ்த்துள்ளோம். அதற்கு எப்போதுமே நாங்கள் மரியாதை கொடுப்போம்". என்னுடைய முழு சந்தோஷமும் என் மகன் தான் அவனுக்கு முழு சுதந்திரமும் கொடுப்பேன் என கூறியுள்ளார்.

Scroll to load tweet…