தமிழ் சினிமாவில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் ஏற்கனவே விவாகரத்து பெற்ற நடிகை அமலாபாலும், சமீபத்தில் தன்னுடைய காதல் மனைவி ரஜினியிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் ராட்ச்சன் படத்தில் நடித்தபோது காதல் ஏற்பட்டதாக ஒரு தகவல் பரவியது.

இந்த தகவல் நம்பக தன்மையற்று இருந்தாலும், சமீபத்தில் இதற்காக தான் மனைவியை விஷ்ணு விஷால் விவாகரத்து செய்தாரா? என்பது போன்ற கேள்விகளை கூட ரசிகர்கள் பலர் எழுப்பி வந்தனர். 

இந்நிலையில் இந்த செய்தியை நடிகர் விஷ்ணுவிஷால் முற்றிலும் மறுத்துள்ளார். மேலும் இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான செய்தியை வெளியிட வேண்டாம் என்றும், ஊடகங்கள் பொருப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறிய விஷ்ணுவிஷால், 'நாங்களும் மனிதர்கள்தான் எங்களுக்கும் குடும்பம் உள்ளது என்றும் என்னவேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

விஷ்ணுவிஷாலின் இந்த விளக்கத்தை அடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வந்த இந்த வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.