வெண்ணிலா கபடி குழு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால் பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு , ராட்சஷன் உள்ளிட்ட  பல படங்களில் நடித்தார்.

கடந்த ஆண்டு  இவர் நடித்து வெளியான ராட்சசன் வெற்றிகரமாக ஓடி நல்ல வசூலலைத் தந்தது.  தற்போது ஜகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். எழில் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. விஷ்ணு விஷாலுக்கு 2011-ல் திருமணம் முடிந்து கடந்த வருடம் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

அதன்பிறகு ராட்சசன் படத்தில் ஜோடியாக நடித்த அமலாபாலுடன் அவரை இணைத்து பேசினர். இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதனை விஷ்ணு விஷால் மறுத்தார். என் விவாகரத்தை தொடர்ந்து இப்படி ஒரு கிசுகிசு வந்தது வருத்தம் அளிக்கிறது என விஷ்ணு தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட ‘செல்பி’ படங்களை விஷ்ணுவிஷால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களின் கீழே வேறு எந்த தகவலையும் அவர் பதிவிடவில்லை. 

ஆனால் கிரிக்கெட் வீரர் அஷ்வின் கூட, இது என்ன திரைப்படமா? என்றுகேட்ட கேள்விக்கு, 'நான் நடிகை இல்லை அஷ்வின்' என ஜூவாலா கட்டா பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..