Asianet News TamilAsianet News Tamil

’உங்க மேல இல்லாத ஊழல் குற்றச்சாட்டா?’...எட்ப்பாடி அரசை எதிர்த்துக் கோர்ட்டுக்கு கிளம்பும் விஷால்...

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆகாயத்துக்கும் பூமிக்கும் நடுவில் ஆயிரம் புரட்சிகள் நடத்திக்காட்டப்படும் என்று பதவிக்கு வந்த விஷால் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தையே அரசாங்கத்தின் கஸ்டடிக்கு அனுப்பி வரலாறு காணாத அசிங்கத்தை நிகழ்த்தியிருக்கிறார்.

vishal to file petion against govt
Author
Chennai, First Published Apr 29, 2019, 9:41 AM IST

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆகாயத்துக்கும் பூமிக்கும் நடுவில் ஆயிரம் புரட்சிகள் நடத்திக்காட்டப்படும் என்று பதவிக்கு வந்த விஷால் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தையே அரசாங்கத்தின் கஸ்டடிக்கு அனுப்பி வரலாறு காணாத அசிங்கத்தை நிகழ்த்தியிருக்கிறார்.vishal to file petion against govt

தொடர்ந்து சிக்கலில் தவித்து வந்த தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளை பணியிலிருந்து விடுவித்துவிட்டு, மாவட்ட பதிவாளர் என்.சேகர் நிர்வாகத்தைக் கையிலெடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை சோதிப்பது மற்றும் சங்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தேவையானவற்றை செய்யவும் என்.சேகர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

விஷால் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறிய எதிரனியினரும் கூட அரசின் இந்த அபாயகரமான முடிவை எதிர்பார்க்கவில்லை என்னும் நிலையில் ஊழல்வாதி என்ற பட்டம் சூட்டப்பட்ட விஷால் வெளியே தலைகாட்ட முடியாமல் கூனிக்குறுகி நிற்கிறார். இது தன்னுடைய ஹீரோ இமேஜையும் கண்டிப்பாகப் பாதிக்கும் என்று விஷால் நினைப்பதால் அரசாங்கத்தை எதிர்த்து வழக்குத் தொடர முடிவு செய்திருக்கிறார். எடப்பாடி அரசின் மீது இல்லாத ஊழல் குற்றச்சாட்டுகளா? என்று போர்க்கொடி தூக்கினால் அது தன்னுடைய அரசியல் எண்ட்ரிக்கும் பயன்படும் என்பது விஷாலின் கணக்கு.vishal to file petion against govt

இன்னொரு பக்கம் திடீரென அறிவிக்கப்பட்ட அரசின்  இந்த முடிவினால் அதிர்ச்சியடைந்த சங்க நிர்வாகிகள் தற்போது செயல்படத் தொடங்கிவிட்டனர். என்.சேகர், தயாரிப்பாளர் சங்க நிர்வாகியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்வது குறித்து அவர்கள் விஷாலின் தலைமையில் இல்லாமல் தனியாக ஆலோசித்து வருகின்றனர். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இருக்கும் வாய்ப்புகளை விளக்கிக்கூறி மனு அளிக்கலாமா என்பது குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். விஷாலின் தன்னிச்சையான முடிவுகளுக்காக மிகவும் பெருமை வாய்ந்த ஒரு சங்கத்தை அரசு தன் வயப்படுத்துவதில் எந்த நியாயமும் இல்லை என்ற குரல் தயாரிப்பாளர்கள் மத்தியில் சற்று உரத்து ஒலிக்கத் துவங்கியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios