இந்திய சினிமாவில் மிக பெரிய தாக்கத்தை உண்டு பண்ணிய படம் என்றால் அது பாகுபலி 2 என்று தான் , அடுத்து தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய படம் என்றால் அஜித்தின் விவேகம் என்று தான் சொல்லணும், இந்த படத்துக்கு உலகில் உள்ள எல்லா தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு வரவேற்க காத்து கொண்டு இருக்கும் படம் என்று சொன்னால் மிகையாகது.

இந்த படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு பல்கேரியா நாட்டில் மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கிறது . இந்த படம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர்.

இதற்கான வேலைகள் படு மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது இதற்கிடையில் இதே தேதியில் விஷாலின் துப்பறிவாளன் படமும் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘துப்பறிவாளன்’. விஷால் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் பிரசன்னா, ஆன்ட்ரியா, பாக்யராஜ் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். புலனாய்வு கதையாக உருவாகியுள்ள ‘துப்பறிவாளன்’ ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.

அஜித், காஜல்அகர்வால் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள ‘விவேகம்’ படமும் ஆகஸ்ட் 11 அன்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அஜித் படத்துடன் விஷால் மீண்டும் மோதும் சுழல் உருவாகியுள்ளது. கடந்த 2013-ஆம் தீபாவளி அன்று அஜித்தின் ‘ஆரம்பம்’ படமும் விஷாலின் ‘பாண்டியநாடு’ படமும் வெளியானது.

இதில், ‘ஆரம்ப’த்தை விட ‘பாண்டிய நாடு’ பரவலான பாரட்டுக்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘ஸ்பைடர்’ படமும் ஆகஸ்ட் 11 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.