vishal slap mohanlaal why?

நடிகர் விஷால், முதல் முறையாக மோகன் லாலுடன் இணைத்து நடித்த மலையாள திரைப்படமான வில்லன் படம் மலையாள திரையுலகில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. ஏற்கனவே சமீபத்தில் இவர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்த துப்பறிவாளன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வெற்றி பெற்றதால் தற்போது டபுள் சந்தோஷத்தில் உள்ளார் விஷால்.

இந்நிலையில் மோகன்லாலுடன் வில்லன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், வில்லன் படத்தில் மோகன் லால் என்கிற மிகப் பெரிய நடிகருடன் மலையாளத்தில் முதல் படத்திலேயே நடித்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்தத் திரைப்படத்தின் இறுதிக் காட்சியின் போது மோகன்லாலை நான் அறைய வேண்டிய ஒரு காட்சி இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே இந்தக் காட்சியில் நடிக்க மிகவும் பயந்தேன். பதற்றமாகவும் இருந்தது. மோகன் லால் தான் இந்தப் படத்திற்கு இந்தக் காட்சி முக்கியம் எனக் கூறி தனக்கு மிகவும் தைரியம் கொடுத்து அந்தக் காட்சியில் நடிக்க வைத்தார்.

நான் ஆரம்பத்தில் இருந்தே இந்தக் கட்சியில் நடிக்க பதற்றமாக இருந்ததால்... மோகன் லாலை உண்மையாகவே அடித்து விட்டேன். பின் அவரிடம் சென்று இதற்காக பல முறை மன்னிப்புக் கேட்டேன் என்று விஷால் கூறியுள்ளார்.