எப்போதுமே படம் ரிலீஸ் ஆனா சுமார் ஒரு 5 மணிநேரத்துல குட் குவாலிட்டியோட தமிழராக்கர்ஸ் ரிலீஸ் பண்ணுவாங்க,  HD பிரிண்ட் வேணும்னா மினிமம் 10 மணிநேரம் காத்திருந்தா போதும் பக்கா குவாலிட்டியோட கிடைக்கும், இன்னும் கொஞ்சம் நாள் போனால் சிம்பு மாதிரி ஆட்கள் படத்தை ஷூட்டிங் நடுவிலேயே லைவ் டெலிகாஸ்ட் ஆகிவிடும்போல, அந்த அளவிற்கு நடக்கிறது இவங்க குடுமிப்பிடி குஸ்தி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கபாலி படத்தை முதலில் ரிலீஸ் செய்வது நீயா, நானா  என தயாரிப்பாளருக்கும்  தமிழ்ராக்கர்ஸ்க்கும் செம்ம சண்டை அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாக திருட்டு விசிடி, தமிழராக்கர்ஸ் என ராத்திரியில் கூட புலம்பிக்கொண்டிருந்தார் விஷால். மேடையில் அசிங்க அசிங்கமாக திட்டுவதும், ஆக்ரோஷமாக சவால் விடுவதுமாக இருந்தார். ஆனால் இதையெல்லாம் தமிழராக்கர்ஸ் மதிப்பதாகவே இல்லை நீ சொல்வதை சொல், நான் செய்வதை செய்கிறேன் என்பது போல, வாரா வாரம் வெள்ளிக்கிழமை படங்களை ரிலீஸ் பண்ணப் போதும் நேரத்திற்கு ரிலீஸ் செய்வது என  பிசியாக இருக்கிறது.

சரி வாங்க விஷயத்துக்கு போவோம்,  நேற்று முன்பு உலகம் முழுவதும் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தை ரிலீஸ் செய்தது லைகா நிறுவனம். டம்மி குவாலிட்டியாக எப்போதுமே ஒரு ஷோ முடிவதற்குள் படத்தை ரிலீஸ் செய்வது தமிழ்ராக்கர்ஸின் வழக்கம், ஆனால் இந்த படம் வெளியான வெகு நேரம் வரை தமிழ்ராக்கர்ஸில் ரிலீஸ் ஆகவில்லை,

வந்தா HD தரத்தில் தான் வருவேன் என சுமார் 10 மணி நேரம் கழித்து பக்கா குவாலிட்டியோடு ரிலீஸ் செய்தது தமிழ்ராக்கர்ஸ். வழக்கமாக படம் வெளியாகும் முன்பு தமிழ்ராக்கர்ஸை கடுமையாக எச்சரித்து அறிக்கை விடும் விஷால், சிம்பு படமான வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்திற்கு கொட்டாவி விடக் கூட வாய்திறக்கவில்லை, காரணம் பழைய பகைக்கு ரிவெஞ் எடுக்கவே சைலண்ட்டாக இருப்பதாக சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.