தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மனுத்தாக்கல் செய்த பின்னர் பேட்டி அளித்த விஷால் அணியினர் பல்வேறு கருத்துகளை கூறினர். வெளி மாநிலத்தவர் தான் தமிழ் நாட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று டிராஜேந்தர் கூறியுள்ள கருத்துபற்றி கேட்டதற்கு அவர் ஆந்திராவில் போய் போட்டியிடலாமே என்று விஷால் பதிலளித்தார்.

மனுத்தாக்கல் செய்தபின்னர் விஷால் அணியினர் பேட்டியளித்தனர்:
மிஷ்கின்: ப்ரட்யூசராக இருந்து போராட போகிறோம் , முழுக்க முழுக்க இதயத்தின் ஆழத்திலிருந்து சினிமாவுக்காக நல்லது செய்ய வந்துள்ளோம். யாருக்கும் வேறு எந்த நோக்கமும் இல்லை பதவி , மற்ற விஷயங்கள் எதுவும் இல்லை.

பிரகாஷ் ராஜ்: மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றம் வேண்டும் , 20 படம் எடுத்து விட்டேன் . நல்ல தரமான சின்ன சின்ன படங்கள் எடுத்துள்ளேன் . இன்றைய சினிமாவில் மாற்றம் தேவைப்படுகிறது. பெரிய குறைகள் உள்ளது. அனுபவம் உள்ளது என்ற எண்ணம் இருப்பதால் இறங்கியுள்ளோம். சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

புது முகங்கள் , புதிய சிந்தனை , புது ஒரு திசைக்கு சினிமாவை எடுத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான். 

கௌதம் மேனன் : விஷால் கூப்பிட்டதால் வந்தேன். 10 ,15 பேர் சேரும் போது பல வேலைகள் செய்ய முடியும். எல்லோருக்கும் பல வேலைகள் உள்ளது அதுக்காகத்தான் வந்தேன். 

ஞானவேல் ராஜா :


ப்ரட்யூசருக்கான சப்சிடி வேண்டும், நலிந்த தயாரிப்பாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் போய் சேரவில்லை அதெல்லாம் இல்லாமல் குடும்பமாக செயல்பட்டு உதவ வேண்டும். ஒவ்வொரு தடவையும் நான் சண்டைபோடுவேன். படம் எடுக்கிறவர்கள் கவுன்சிலுக்கு வருவதில்லை என்று சண்டை போடுவேன். 

இந்த முறை எல்லோரும் ஒன்றாக வந்துள்ளோம். விஷால் நடிகர் சங்கத்தில் மேக்சிமம் சொன்ன விஷயத்தை செய்துள்ளார். அனைவரும் ஓராண்டுக்கான ராஜினாமா லட்டருடன் தான் போட்டியிட வந்துள்ளோம். நிச்சயம் நல்லது செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. 

பாண்டிராஜ்:

பொதுவாக டைரக்டர்கள் நம்ம உண்டு நம்ம வேலை உண்டு என்று போய் விடுவோம். அப்போதுதான் ஒரு படத்துக்காக 50 முறைக்கு மேல் வரவேண்டியதாக இருந்தது. கட்டபஞ்சாயத்து என்பது வேண்டாம் , கெட்டபஞ்சாயத்தும் வேண்டாம்.

எனக்கே நிறைய அனுபபவம் கிடைத்தது அதனால் தான் இந்த நிலை மாறவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இணைந்துள்ளோம். 

விஷால்:

இன்றோடு மனுத்தாக்கல் முடிகிறது எல்லோரும் மனுத்தாக்கல் செய்துள்ளோம். இப்பவே ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து போட்டு ஓராண்டு கழித்து முன் தேதியிட்டு ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளோம். 27 பேர் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளோம். நாங்கள் சொன்னதை ஒரு வருடத்தில் செய்யாவிட்டால் வெளியேறிவிடுவோம்.

நிறைய பிரச்சனைகள் உள்ளது. இயக்குனர் நடிகர் , தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர்கள் இணைய உள்ளோம். என்னுடைய பன்முக தன்மை பற்றி பிரச்சனை வரும்போது அதையும் சந்திப்போம்.

ஒரு தயாரிப்பாளர் பிரச்சனை எனபது நடிகர் சம்பளத்தில் மட்டுமே இல்லை. பல பிரச்சனைகள் உள்ளது. நிறைய விஷௌஅயங்கள் இருக்கிறது அதை தீர்மாணிக்க வேண்டுமானால் பொறுப்புக்கு வர வேண்டும். வந்தால் தான் பிரச்சனையை தீர்க்க முடியும். ரெண்டுவருடமா போராடி சோர்ந்து போய்விட்டோம். 

தயாரிப்பாளர் சங்கத்தில் அரசியல் இருக்காது. கட்சிகள் வேறு. டி.ராஜேந்தர் காலையில் பேட்டியின் போது நம்மை ஆள்பவர்கள் அண்டை மாநிலங்களிலிருந்து தான் வருகிறார்கள் தமிழன் வேறு எங்காவது பொறுப்புக்கு வர முடியுமா என்று கேட்டுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த விஷால் ஏன் அவர் அங்க போய் கூட அவர் நிற்கலாமே. அவர் எதாவது பேசுகிறார் பேசிவிட்டு போகட்டுமே. என்று கூறினார்.