vishal put some order for nayanthara and ajith
நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் "நம்ம அணி" என்கிற பெயரில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட உள்ளார்.
இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் என்னென்ன தவறுகள் நடக்கின்றது, அவற்றை எப்படி தீர்ப்பது என பெரிய பட்டியல் போட்டு ஒவ்வொருவராக சந்தித்து இது பற்றி எடுத்து கூறி வருகின்றனர்.
அதே போல் தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு பதவிகளுக்காக போட்டியிடும் , அனைவருடனும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்குபெற மறுக்கும் முன்னணி நடிகையான நயன்தாராவை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது தயாரிப்பாளர்கள் உங்களை போன்ற நடிகர்களை நம்பித்த்தான் பணம் போடுகின்றனர், அதற்கு அவர்களுக்கு நாம் செய்யவேண்டியது அவர்களுடைய படத்தை ப்ரோமோஷன் செய்வது.
இனி வெளிவரும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அந்த படத்தின் நடிகர் நடிகைகள் கலந்துகொள்ளவில்லை என்றால், அவர்களுக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் கொடுக்கமுடியாது என தீர்மானித்துள்ளதாக நயனிடம் நாசுக்காக கூறியுள்ளாராம்.
இதை கேட்டு ஷாக் ஆனா நயன்தாரா, வாய் அடைத்து போய் சரி என்பதை மட்டும் தான் கூறினாராம். மேலும் இதே போல் அடுத்ததாக அஜித் விவேகம் படத்தின் படப்பிடிப்பில் தற்போது உள்ளதால் அவர் பல்கேரியாவில் இருந்து வந்ததும் இது குறித்து நேரில் சந்தித்து பேச உள்ளார்களாம்.
