vishal office income tax raid

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலின் அலுவலகத்தில் இன்று திடீர் என ஜிஎஸ்டி வரித்துறையினர் 3 மணி நேரத்திற்கும் மேல் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இவருடைய அலுவலகத்தில் இப்படி திடீர் என சோதனை மேற்கொள்ள காரணம், விஷால் பாஜகவிற்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு பேசியதும், விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டதும் தான் என கூறப்படுகிறது.

மேலும் எச்.ராஜா மெர்சல் படத்தை இணையதளத்தில் பார்த்தேன் என்று கூறியதும், நீங்கள் எல்லாம் ஒரு தலைவர் தானே இப்படி கூற வெட்கமாக இல்லையா எனக் கூறி அவரை கேவலப்படுத்தும் விதத்தில் பேசி, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காட்டமாகக் கூறினார்.

இதுவே விஷாலின் அலுவலகத்திற்கு இப்போது ஜிஎஸ்டி வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதற்கான பின்னணி என பலரும் தங்களுடைய கருத்தைக் கூறி வருகின்றனர்.