தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுகுழு கூட்டம் வரும் 27ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது என நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவும், செவாலியே விருது பெற்ற கமல்ஹாசனுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த விழாவிற்கு சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமாருக்கும், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாவிக்கும் அழைப்பு விடுக்கவில்லை என பொதுச்செயலாளர் விஷால் கூறியுள்ளார்.

மேலும் இந்த பொதுகுழு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்யவுள்ளதாவும் விஷால் கூறினார்.