துணை இயக்குனராக பணியாற்றி பின் நடிகராக மாறியவர் விஷால். தற்போது பல படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தீடீர் என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து, நடிகர் விஷாலை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீங்கினார்கள் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்.
இதனால் விஷாலுக்கு எதிராக செயல் பட்டு வந்த நடிகர் சங்க உறுப்பினர் சங்கையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 20 பேர், தன் எதிரி ஒழிந்ததை கொண்டாடும் விதமாக.
நடிகர் சங்க வளாகத்தில் அமைத்துள்ள வித்தியா கணபதிக்கு சுவாமிக்கு 108 தேங்காய் உடைத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
