தமிழ் திரைப்பட உலகில் இரண்டு முக்கிய பதவிகளை வகித்து வந்தவர் நடிகர் விஷால். தற்போது இவர் 'அயோக்கியா' படத்தின் டிக்கெட் விலையில் இருந்து, குறிப்பிட்ட தொகையை விவசாயிகளுக்கு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதவி ஏற்றவுடன்,  தான் நடிக்கும் படங்களின் டிக்கெட் விலையில் இருந்து குறிப்பிட்ட தொகை விவசாயிகள் நலனுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி, ‘இரும்புத்திரை’ மற்றும் ‘துப்பறிவாளன்’ ஆகிய படங்களின் வெற்றி பெற்றதால் அந்த படங்களின் டிக்கெட் தொகையில் இருந்து 11 லட்ச ரூபாயை, நலிந்த விவசாயிகளுக்கு கொடுத்தார்.

இதே போல் தற்போது 'அயோக்கியா' படத்தின் டிக்கெட் விலையில் இருந்து, மூன்றாவது முறையாக விவசாயிகளுக்கு நிதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் தற்போது, ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.