நடிகர் விஷால் எங்கு சென்றாலும் பிரச்சனை அங்கு வந்து விடுகிறது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், ஜல்லிக்கட்டு பிரச்சனை என பல இருந்தாலும் தனது அறக்கட்டளை மூலம் விஷால் செய்து வரும் நல்ல காரியங்கள் மட்டும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கிராமங்களில் இருந்து பல கிலோமீட்டர் தூரம் நடந்து வருவதாகவும், அவர்களுக்கு உதவி செய்யுமாறும் சிலர் விஷாலுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை விசாரித்து உறுதிப்படுத்திய நடிகர் விஷால், உடனே தனது தேவி அறக்கட்டளையின் மூலம் அந்த மாணவர்கள் பள்ளிக்கு கஷ்டமின்றி வர, 35 புத்தம் புதிய இரு சக்கர மிதிவண்டிகளை வழங்கினார்.

சைக்கிள் பெற்ற மாணவர்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்று எதாவது உதவிகள் இருந்தால் சொல்லுங்கள் அதை மாணவர்களுக்காக செய்து தருவதாகவும் கூறியுள்ளாராம்.