தீபாவளிக்கு அண்ணாத்த படத்துக்கு போட்டியாக எனிமி படத்தை வெளியிட்ட விஷால், பொங்கலுக்கு அஜித்தின் வலிமை படத்துக்கு போட்டியாக ‘வீரமே வாகை சூடும்’ படத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வருபவர் விஷால். இவர் நடித்த எனிமி திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. ரஜினியின் அண்ணாத்த படத்துக்கு போட்டியாக வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, மலையாள நடிகர் பாபுராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்தை டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் பெரிய பட்ஜெட் படங்களான புஷ்பா, ஸ்பைடர்மேன் உள்ளிட்டவை ரிலீசாக உள்ளதால் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தார். 

ஏற்கனவே தீபாவளிக்கு அண்ணாத்த படத்துக்கு போட்டியாக எனிமி படத்தை வெளியிட்ட விஷால், பொங்கலுக்கு அஜித்தின் வலிமை படத்துக்கு போட்டியாக ‘வீரமே வாகை சூடும்’ படத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் விஷால் பொங்கல் ரேஸில் இருந்தும் பின்வாங்கி உள்ளார். ஏனெனில் பொங்கலை ஒட்டி வலிமை மட்டுமின்றி பான் இந்தியா படங்களான ராதே ஷ்யாம், ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களும் ரிலீசாக உள்ளதால் நடிகர் விஷால் ‘வீரமே வாகை சூடும்’ படத்தை ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று வெளியிட உள்ளார்.

இதன்மூலம் பொங்கலுக்கு அஜித்தின் வலிமை மட்டுமே நேரடி தமிழ் படமாக ரிலீசாக உள்ளது. ஆர்.ஆர்.ஆர் படமும் இதற்கு ஒரு வாரம் முன்னதாக ஜனவரி 7-ந் தேதி ரிலீசாக உள்ளது. அதேபோல் ராதே ஷ்யாம் படமும் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.