தமிழ் சினிமாவில், நடிகராக மட்டுமில்லாமல், நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், என எப்போதும் தன்னை பிஸியாகவே வைத்துக்கொள்ளும் விஷால். இந்த வருட காதலர் தினத்தை  தன்னுடைய காதலி அனிஷா உடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

சினிமாவில் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும்  விஷால் தற்போது, சண்டை கோழி படத்தை தொடந்து அயோக்கியா, படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு,  விஷாலின் தந்தை விஷாலுக்கும் அனிஷா என்கிற பெண்ணுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து விஷால் தன்னுடைய வருங்கால மனைவி, அனுஷாவின் புகைப்படத்தை வெளியிட்டார்.

மேலும் இது காதல் திருமணம் என்றும் உறுதி செய்தார்.  இந்நிலையில் நேற்று கொண்டாடப்பட்ட காதலர் தினத்தை தன்னுடைய வருங்கால மனைவியும், காதலியுமான அனிஷா உடன் கொண்டாடியுள்ளார் விஷால். அப்போது  காதல் மனைவிக்கு நெத்தியில் முத்தமிட்டவாறு எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தன்னுடைய ஆழமான காதலை அனிஷாவிற்கு தெரிவித்துள்ளார்.