vip2 releasing on dhanush birthday
வேலையில்லா பட்டதாரி படத்தின் அடுத்த இரண்டாம் பாகமான VIP 2 அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வேலையில்லா பட்டதாரி 2'. தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. "எப்போது 'வேலையில்லா பட்டதாரி 2' வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படும்" என படக்குழுவினர் நேற்று அறிவித்திருந்த நிலையில், நேற்றிரவு ஜுலை 28-ம் தேதி 'வேலையில்லா பட்டதாரி 2' வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
தனுஷின் பிறந்த நாளாகும் வரும் ஜூலை 28-ம் தேதியை முன்வைத்து வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. ஜுலை 28ம் தேதி வெளியீட்டை உறுதிப்படுத்த படக்குழு வெளியிட்டுள்ள விளம்பரம்
