vinichakravarthy memories

பிரபல நடிகர் வினுசக்ரவர்த்தி (72) சென்னையில் போலிஸ் சப் -இன்ஸ்பெக்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகல் அவர்களிடம் கதாசிரியர் மற்றும் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

 'ரோசாப்பூ ரவிக்கைகாரி' படம் மூலம் திரைக்கதை எழுதி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு 'வண்டி சக்கரம் ','கோயில் புறா','இமைகள்', 'பொண்ணுக்கேத்த புருஷன் ' ஆகிய படங்களுக்கு கதை-திரைக்கதை, வசனம் எழுதி துணை இயக்குனராகவும் பணி புரிந்தார். 

தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், படுகா,இந்தி,ஆங்கிலம் போன்ற மொழிகளில் 1003 படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படம் சீரடி சாய்பாபா. 

தனது இயல்பான நடிப்பால் மக்கள் அனைவரையும் கவர்ந்த இவர் நேற்று இரவு 7 மணி அளவில் காலமானதை அறிந்து திரையுலகினர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.அவரின் ஆத்மா சாந்தி அடையவும், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு நியூஸ் பாஸ்டின் சார்பாக அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.