தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ள போதிலும், முன்னணி இடத்தை பிடிக்க போராடி வரும் பிரபல நடிகரும்,  விஜயின் சகோதரருமான விக்ராந்த், இவர் இயக்குனர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'பக்ரீத்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.   

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை வசுந்தரா நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், விக்ராந்த் நடித்துள்ள 'பக்ரீத்' திரைப்படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஒட்டகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், இஸ்லாமியர்களின் பண்டிகையான 'பக்ரீத்' வருவதை ரிலீஸ் செய்கின்றனர் படக்குழுவினர்.

பொதுவாக முன்னணி நடிகர்கள் படம் வெளியாகிறது என்றால், வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களின் ரிலீஸ் தள்ளிபோடப்படும். ஆனால் 'பக்ரீத்' படத்தின் கதையின் மீது உள்ள நம்பிக்கையால் அஜித்தின் படத்தோடு நேரடியாக மோத உள்ளது.

டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை என் 10 புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.