Asianet News TamilAsianet News Tamil

chiyaan vikram: இது வெறித்தனமான காம்போ ஆச்சே... ராஜமவுலி படத்தில் வில்லனாக நடிக்கும் விக்ரம்?

கோப்ரா, துருவ நட்சத்திரம், மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ள விக்ரம், அடுத்ததாக ராஜமவுலி உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.

Vikram to play the antagonist in SS Rajamouli film with mahesh babu
Author
Tamil Nadu, First Published Nov 23, 2021, 3:26 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். தற்போது இவர் கைவசம் கோப்ரா, துருவ நட்சத்திரம், மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் உள்ளன. இதில் கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தை கவுதம் மேனன் இயக்கி உள்ளார். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Vikram to play the antagonist in SS Rajamouli film with mahesh babu

அடுத்ததாக விக்ரம் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுதவிர மகான் படத்திலும் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரமுடன் அவரது மகன் துருவ்வும் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

Vikram to play the antagonist in SS Rajamouli film with mahesh babu

இந்நிலையில், நடிகர் விக்ரம் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் ராஜமவுலி அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். 

இப்படத்தில் வில்லனாக நடிக்க விக்ரமுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios