vikram shocking getup
நடிகர் விக்ரம் வித்தியாசமான கதைகளை மட்டும் அல்ல... மாறுப்பட்ட கதாப்பாத்திரங்களிலும் தேர்வு செய்து நடித்து அசத்தி வருபவர். அவர் தேர்வு செய்யும் படங்களுக்காக தன்னுடைய உடலையும் வருத்தி நடிப்பவர் என்பது அனைவரும் அறிந்தது தான்.
இப்படி அவர் உடலை வருத்தி நடித்த ஐ, சேது போன்ற படங்கள் அவருக்கும் மிகவும் முக்கிய படங்களாக அமைந்தது.
இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் 'சாமி 2' படத்திற்காக ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.
இயக்குனர் ஹரி இயக்கும் இந்தப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பித்தது. இந்த பாடத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் கமிட் ஆன நடிகை திரிஷா ஒரு சில காரணத்தால் இந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாமி 2 ஆம் பாகத்திலும் விக்ரம் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இருப்பினும் இந்த திரைப்படம் சாமி படத்தின் தொடர்ச்சி கிடையாது என ஹரி ஏற்க்கனவே அறிவித்துள்ளார்.
தற்போது விக்ரம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இதில் இருப்பவர் விக்ரம் போலவே இருக்கிறார். அவரின் உருவத்தை பார்த்தால் சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கும்.
இன்றும் இளமையாக தெரியும் அவர் இந்த வீடியோவில் அதிக வயது ஆனது போல் இருக்கிறார் என்பது சிலரின் கருத்து. ஆனால் விக்ரம் இது யாரென்று தெரியவில்லை என கூறியிருக்கிறார். எனினும் இந்தப்படத்தில் வயதான தோற்றத்தில் நடிக்கும் விக்ரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அவர் வெளியிட்டுள்ள வீடியோ இதோ...
