விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பிரமிக்கவைக்கும் வகையில் உள்ளது. அதன்படி துபாயில் உள்ள உலகின் உயர்ந்தக் கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ‘விக்ரம்’ ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

விக்ரம் ரிலீஸுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூர்யாவின் தோற்றத்தை வெளியிட்டார். அந்த ட்வீட்டரில் "இதற்கு மிக்க நன்றி @Suriya_offl சார்," என்று லோகேஷ் எழுதினார். அந்த புகைப்படத்தில் புதிய சிகை அலங்காரம் மற்றும் காதில் ஸ்டட் என் மாஸ் லுக்கில் உள்ளார் சூர்யா. இப்படத்தில் சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Scroll to load tweet…

முன்பு சூர்யா விக்ரம் படத்தில் ஒரு முக்கிய ரோலில் இருப்பது குறித்து பல செய்திகள் வெளிவந்த போதிலும் சூர்யாவின் கேமியோ கவனமாக பாதுகாக்கப்பட்ட ரகசியமாக இருந்து வந்தது.. இருப்பினும், ரசிகர்கள் டிரெய்லரில் சூர்யாவைக் கண்டுபிடித்து விட்டனர். இதனால் சூர்யாவின் ரோல் குறித்து தயாரிப்பாளர்களால் மறுக்க முடியவில்லை. ஏற்கனவே கமல்ஹாசன் , விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் சூர்யாவின் இருப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சியின் போது, ​​சூர்யாவை வைத்து படம் தயாரிப்பது குறித்து கமல் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் குழுமியுள்ள விக்ரம் படம் குறித்த கொண்டாட்டம் ஒரு பக்கம் இருக்க இதன் ட்ரைலர் குறித்த செம அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை 8 மணிக்கு உலகின் மிக உயரமான துபாய் புர்ஜ் கலிஃபாவில் ‘விக்ரம்’ ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Scroll to load tweet…