மகனின் முதல் பட அறிமுகமே படு பரிதாபமாக ஆன நிலையில் பயங்கர அப்செட்டில் இருக்கும் நடிகர் விக்ரம் பேசாமல் ‘வர்மா’ படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறு ஒரு புதிய புராஜக்டுடன் களம் இறங்கலாமா என்கிற ரீதியிலும் கன்ஃபியூஸ் ஆகிவருகிறாராம்.

‘வர்மா’ விலிருந்து பாலாவை வெளியேற்றியவுடன் அப்படத்தை இயக்குவதற்கு தமிழின் முன்னணி இயக்குநர்கள் பலரும் ஆர்வம் காட்டுவார்கள் என்று நடிகர் விக்ரமும் தயாரிப்பாளர் முகேஷும் நினைத்திருக்க, அவர்கள் நினைப்பில் விழுந்ததென்னவோ பலத்த சம்மட்டி அடிதான். படத்தை ஒருமுறை திரையிட்டுக்காட்டாமல் கூட தூக்கி எறியப்படுவதை விரும்பாத இயக்குநர்களில் பலரும் விக்ரம் மற்றும் தயாரிப்பாளரின் செயலை வெறுத்து ஒதுங்கவே செய்தனர். குறிப்பாக முன்னணி தமிழ் இயக்குநர்கள் யாரும் இப்படத்தை இயக்க முன்வரவில்லை.

இந்நிலையில்தான் கதாநாயகி பெயரை மட்டும் அவசரமாக அறிவித்துள்ள தயாரிப்பாளர் தரப்பு ஒரிஜினல் ‘அர்ஜூன் ரெட்டியை இயக்கிய சந்தீப் வங்காவின் இணை இயக்குநரையே கமிட் செய்ய முடிவெடுத்திருக்கிறது. புதிய டீம் பரபரப்பாக, இன்னும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்த்த விகரமுக்கோ படு அப்செட். தயாரிப்பாளர் பெயரில் புதிய ‘வர்மா’விற்கு தானே பணம் இன்வெஸ்ட் பண்ணவேண்டிய நிலையில் பேசாமல் ‘வர்மா’ தூக்கி ஓரம் வைத்து வேறு ஏதாவது கதை கேட்கலாமா என்ற ஒரு குழப்பமான முடிவில் இருக்கிறாராம் விக்ரம்.