கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள மகான் திரைப்படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

நடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். இது தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்காகும். 'ஆதித்ய வர்மா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அப்படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து தனது தந்தையுடன் இணைந்து ‘மகான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் துருவ் விக்ரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

இந்நிலையில், மகான் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகர் விக்ரமும், அவரது மகன் துருவ்வும் மகான் படத்தின் டப்பிங் பணிகளை முழுமையாக முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டப்பிங் முடித்த உற்சாகத்தில் தந்தையும், மகனும் உற்சாகமாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது.