சமீபத்தில் வெளியான 'சாமி 2 ' திரைப்படம் தோல்வியடைந்ததால், அடுத்ததாக விக்ரம் முழுமையாக நம்பி இருப்பது 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை தான். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் திரைப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

சமீபத்தில் வெளியான 'சாமி 2 ' திரைப்படம் தோல்வியடைந்ததால், அடுத்ததாக விக்ரம் முழுமையாக நம்பி இருப்பது 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை தான். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் திரைப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. மேலும் அடுத்ததாக விக்ரம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழியில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



விக்ரம் ஆரம்ப காலத்தில் பல மலையாள படங்களில் நடித்தாலும். 'சேது' படத்துக்கு பின் நட்சத்திர அந்தஸ்தை தொடர்ந்து, தமிழ் படங்களில் 'பிஸி'யாகி விட்டார்.

மலையாள படங்களில் நடிக்க அவரால் 'கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது 18 வருடங்கள் கழித்து மலையாள ரசிகர்களை குஷியாக்கும் விதத்தில், அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

அதாவது 18 வருடங்களுக்கு பின் மீண்டும் விக்ரம் மலையாள படத்தில் நடிக்க உள்ளது. இந்த படத்தை மலையாள பட உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அன்வர் ரஷீத் இந்த படத்தை இயக்குகிறார்.

இவர் ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் இடையே நிறைய இடைவெளி எடுத்துக்கோவார். 5 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'உஸ்தாத் ஓட்டல்' என்ற மலையாள படத்தை இயக்கிய இவர், அதன் பிறகு தற்போது விக்ரம் நடிக்க உள்ள புதிய படத்தை இயக்க உள்ளார்.

இந்த படம் தமிழ், மற்றும் மலையாளம் ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்து இது வரை வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.