Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் படமாகும் வரலாற்று காவியம்... சிவாஜி கணேசன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம்..!

vikram acting karnan epic story
vikram acting karnan epic story
Author
First Published Jan 8, 2018, 11:24 AM IST


1964 ம் ஆண்டு வெளிவந்த கர்ணன் திரைப்படம் மீண்டும் படமாகிறது. இதில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடிக்கிறார். 

54 வருடங்களுக்கு முன் தமிழில் வெளிவந்த படம் கர்ணன்.  இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணன் கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருப்பார். இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. 

vikram acting karnan epic story

இந்நிலையில் மஹாவீர் கர்ணா என்ற பெயரில் 350 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு திரைப்படம் உருவாகிறது. இதை நியூயார்க்கை சேர்ந்த யுனைடெட் ஃபிலிம் கிங்டம் இப்படத்தை  தயாரிக்கிறது.

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற என்னு நிண்டே மொய்தீன் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இப்படத்தை இயக்குகிறார். 

vikram acting karnan epic story

இந்நிலையில் இந்த படத்தில் கர்ணனாக நடிகர் விக்ரம் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. துரியோதனன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.  

விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம், ஹரி இயக்கத்தில் சாமி2 என விக்ரம்  பிஸியாக உள்ளார். மேலும் மஹாவீர் கர்ணாவின் படப்பிடிப்பு  வரும் அக்டோபரில் தொடங்கும் என்றும்  2019 ம் ஆண்டு  தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vikram acting karnan epic story

தமிழ் கர்ணன் ரசிகர்களுக்கு கசப்பான செய்தியாக மஹாவீர் கர்ணா  ஹிந்தியில் மட்டுமே வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios