vijaysethypathy news

விஜய் சேதுபதி தற்போது 'விக்ரம் வேதா','சீதக்காதி','மாமனிதன்',' 96 ','கருப்பன்' போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சக நடிகர்கள் தங்களுடைய படத்தின் ப்ரோமோஷனுக்கு அழைப்பு விடுத்தால், அங்கேயும் கலந்து கொண்டு தன்னுடைய நண்பர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது, ஆரஞ்சு மிட்டாய் படத்தை தொடர்ந்து, மீண்டும் பீஜி விஸ்வநாத் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் விஜயசேதுபதி.

இந்த படத்தில் கதை, திரைக்கதை, வசனம் என டி.ஆர் போல் அனைத்து வேலைகளிலும் கலக்க உள்ளாராம்.இதனால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இப்போதே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது