Asianet News TamilAsianet News Tamil

“எப்பவுமே மெயின் சுவிட்ச் தான் மஸ்ட்டு”... அதிரடி அரசியல் பேசும் விஜய்சேதுபதியின் “அண்ணாத்த சேதி” பாடல்...!

கார்த்திக் நேத்தா எழுத்தில் வரிகள் அனைத்தும் தீப்பொறி பறக்கிறது. பாட்டை கேட்கும் போது அடித்தட்டு மக்களுக்கு போராடும் அரசியல்வாதியாக விஜய்சேதுபதி நடித்திருப்பார் என தெரிகிறது.

Vijaysethupathi Tughlaq durbar Annathe sethi song released
Author
Chennai, First Published Aug 3, 2020, 8:40 PM IST

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஹீரோவாக மட்டுமே நடிக்காமல், அழுத்தமான வில்லன் வேடத்தில் நடித்து, மிரட்டி வருகிறார். அந்த வகையில் தளபதி விஜய்யுடன் இவர் நடித்துள்ள, 'மாஸ்டர்' திரைப்படம் அனைத்து பணிகளும், முடிவடைந்தும் கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Vijaysethupathi Tughlaq durbar Annathe sethi song released

 

இதையும் படிங்க: படுக்கையறையில் படுகவர்ச்சி... இளசுகளை மூச்சு முட்ட வைத்த பூனம் பஜ்வா...!

இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்துள்ள அரசியல் த்ரில் திரைப்படமான 'துக்ளக் தர்பார்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி தாறுமாறு வைரலானது. அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி ஒரு டேபிளின் முன்பு நின்றிருக்க கீழே தெரியும் பிரதிபலிப்பில் வேறொரு விஜய் சேதுபதி தெரிவது போல் காட்டப்பட்டிருந்தது. 

 

Vijaysethupathi Tughlaq durbar Annathe sethi song released

 

பிரசாத் தீனதாயளன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ள இந்த படத்தில் பார்த்திபன், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மெல்லிசையால் மனதை கவர்ந்த கோவிந்த் வசந்தா, துக்ளக் தர்பார் படத்திற்காக அதிரடியாக இசையமைத்துள்ளார். 

 

Vijaysethupathi Tughlaq durbar Annathe sethi song released

 

இதையும் படிங்க: இரண்டாவது கணவருக்கு அவசர திருமணம்... சீரியல் நடிகை போலீசில் பரபரப்பு புகார்...!

இன்று அந்த படத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அண்ணாத்த சேதி பாடல் தாறுமாறு வைரலாகி வருகிறது. பிரபல ராப் பாடகர் அறிவு இந்த பாடலை பாடி இருக்கிறார். அவர் இதற்கு முன்பு மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி ரெய்டு என்ற பாடலை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அதனை தொடர்ந்து விஜய் சேதுபதிக்காக இந்த பாடலை அவர் பாடி இருக்கிறார்.கார்த்திக் நேத்தா எழுத்தில் வரிகள் அனைத்தும் தீப்பொறி பறக்கிறது. பாட்டை கேட்கும் போது அடித்தட்டு மக்களுக்கு போராடும் அரசியல்வாதியாக விஜய்சேதுபதி நடித்திருப்பார் என தெரிகிறது. இதோ அந்த பாடல்... 

Follow Us:
Download App:
  • android
  • ios