Asianet News TamilAsianet News Tamil

“ஈழத் தமிழர்களின் போராட்டத்தை இழிவுபடுத்தவில்லை”... விஜய்சேதுபதி பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம்...!

விஜய்சேதுபதியின் ரசிகர்கள் உட்பட பலரும் இரண்டு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசின் கொடியை நெஞ்சில் குத்திக்கொண்டு நீங்கள் நடிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்துள்ளனர். 

Vijaysethupathi starring Muthiah muralitharan Biopic production company Released Statement
Author
Chennai, First Published Oct 14, 2020, 8:30 PM IST

இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். ஸ்ரீபதி இயக்கும் அந்த படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிப்பது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நேற்று படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு 800 என பெயர் வைத்துள்ளனர். போஸ்டரில் விஜய் சேதுபதி பார்க்க அச்சு அசலாக முத்தையா முரளிதரன் போன்றே இருந்தார். விஜய்சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்றாலே அவருடைய ரசிகர்கள் செம்ம குஷியாகிவிடுவார்கள். ஆனால் இந்த முறையோ அப்படியே ஆப்போசிட்டா #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

Vijaysethupathi starring Muthiah muralitharan Biopic production company Released Statement

பல்வேறு சூழ்நிலைகளில் முரளிதரன் இலங்கை அரசுக்கும் ராஜபக்சேவுக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளநிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்துவருகின்றன.  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இலங்கை தமிழர்கள் என முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. விஜய்சேதுபதியின் ரசிகர்கள் உட்பட பலரும் இரண்டு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசின் கொடியை நெஞ்சில் குத்திக்கொண்டு நீங்கள் நடிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்துள்ளனர். 

Vijaysethupathi starring Muthiah muralitharan Biopic production company Released Statement

இந்நிலையில் பட தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  “முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 திரைப்படம் பல்வேறு வகையில் அரசியல் ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம். 800 திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில் எந்த வித அரசியலும் கிடையாது. தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்டக் கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையம்சம்.

Vijaysethupathi starring Muthiah muralitharan Biopic production company Released Statement

இத்திரைப்படம் இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளைக் கடந்து சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். இத்திரைப்படத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதத்திலான காட்சியமைப்புகள் கிடையாது. கூடுதலாக இத்திரைப்படத்தில் இலங்கையை சேர்ந்த பல தமிழ் திரைத்துறை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்குபெற இருக்கின்றனர். அதன்மூலம் இலங்கைத் தமிழ் திரைத்துறை கலைஞர்களுக்கு தங்கள் திறமையை உலக அரங்கில் வெளிக் காட்ட இந்த படம் நிச்சயமாக ஒரு அடித்தளமிட்டு தரும் என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். கலைக்கும் கலைஞர்களுக்கும் எல்லைகள் கிடையாது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios