'இறைவி' படத்திற்குப்பின் அஞ்சலி - விஜய் சேதுபதி மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'சிந்துபாத்'. நவீன ராமாயண கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து 'சேதுபதி',  'பண்ணையாரும் பத்மினியும்' ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  திடீரென ஒரு சில காரணங்களால் படம் ரிலீஸ் செய்வது ரத்துசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தை வரும் ஜூன் 28ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இதே நாளில் யோகி பாபு நடித்த தர்மப்பிரபு,  ஜோதிகா நடித்துள்ள ராட்சசி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.