vijaysethupathi acting transgender

தமிழ் சினிமாவில் பெண் வேடம் போட்டு நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று கூறலாம். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ், பிரகாஷ் ராஜ், விக்ரம், பிரஷாந்த், சிவகார்த்திகேயன் என அந்த காலத்தில் இருந்து தற்போது வரை பல முன்னணி நடிகர்கள் பெண் வேடம் ஏற்று நடித்து வருகின்றனர்.

ஆனால் எத்தனை நடிகர்கள் பெண் வேடம் போட்டு நடித்தாலும் 'அவ்வை ஷண்முகி' கமல், 'ஆணழகன்' பிரஷாந்த், 'ரெமோ' சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்ததை யாராலும் மறக்க முடியாது.

தற்போது இந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளார் 'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி. இவர் தற்போது 'ஆரண்யகாண்டம்' படத்தை இயக்கிய தியாகராஜ குமார ராஜா இயக்கிவரும் பெயரிடப்படாத படத்தில் ஷில்பா என்கிற பெண் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டது.

தற்போது அந்த தகவலை உறுதிப்படுத்துவதுபோல், விஜய்சேதுபதி சிவப்பு நிற சேலை அணிந்து மேக் அப் போட்டுக்கொண்டு, கூலிங் கிளாஸ் அணிந்திருப்பது போல் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

அனைத்து கதாபாத்திரங்கள் மூலமும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் மனதில் நிலைத்து நிற்கும் விஜய்சேதுபதி, பெண் வேடத்தில் நிலைத்து நிற்பாரா என பொறுத்திருந்து பாப்போம்.