100 கோடி,200 கோடியில் படம் பண்ணும் நம் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், கதாசிரியர்களுக்கு மனசார ஒரு லட்சம் ரெண்டு லட்சம் கொடுத்து கதையை வாங்கிப் படம் பண்ணும் பக்குவத்துக்கு எப்போதுதான் வருவார்களோ என்பதுதான் இன்னும் விளங்கவில்லை.

ஒன்று கொரியன் டிவிடியை சுடுகிறார்கள் அல்லது அரும்பாடுபட்டு கதை எழுதி படம் பண்ண அலைந்துகொண்டிருக்கிற அசிஸ்டெண்ட் டைரக்டர்களின் கதையைத் திருடி அவர்களது வயிற்றில் அடிக்கிறார்கள்.

இதோ இந்த லேட்டஸ்ட் பஞ்சாயத்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் விஜயசேதுபதியின் ’96 படம் பற்றியது.

விச்சு என்கிற உதவி இயக்குநர் ‘ தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ’96 படத்தின் கதை என்னுடையது. அது என் வாழ்க்கையில் நடந்த கதை. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பாளர் நந்தகுமாருக்கு நான் சொன்ன கதை இது. ஏனோ ஒரிஜினல் கதை சொன்ன என்னை நம்பி படத்தைக் கொடுக்காமல் ஒளிப்பதிவாளரான பிரேமுக்குக் கொடுத்திருக்கிறார் என்பது புரியவில்லை. இந்தத் திருட்டு ஒருநாள் வெளிப்பட்டே தீரும். என்றாவது ஒருநாள் இதே கதையை இன்னும் சிறப்பாக இயக்கி நான் யார் என்பதை வெளிப்படுத்தியே தீருவேன்’ என்று பொங்கி வருகிறார்.

வெற்றி பெற்ற கதைகளுக்கு சொந்தம் கொண்டாடுபவர்களில் பாதிப்பேர் டுபாக்கூர்கள் என்றாலும் எழுகிற புகார்கள் அத்தனையையும் புறந்தள்லிவிடுவதற்கில்லை. ஏனெனில் நம்மவர்களில் சொந்தச் சரக்கை விட ‘சுட்டு’ படம் பிடிப்ப்வர்கள் அதிகம்.

மேற்படி விச்சுவின் புகாருக்கு தயாரிப்பாளர் நந்தகுமாரும், இயக்குநர் பிரேமும் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.