நடிகர் விஜய் திரையுலகில் அறிமுகமாகி 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளை மேலும் சிறப்பிக்கும் விதமாக தற்போது நடிகர் விஜய்யின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் படம் கடந்த மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடித்துள்ளனர். மேலும் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனிடையே பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 100-வது நாளை எட்டியதை கொண்டாடும் விதமாக சமீபத்தில் பீஸ்ட் படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்நிலையில், நடிகர் விஜய் திரையுலகில் அறிமுகமாகி 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளை மேலும் சிறப்பிக்கும் விதமாக தற்போது பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் ஆற்றங்கரையோரம் கேசுவலாக நின்றபடி இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.