Asianet News TamilAsianet News Tamil

Beast: ‘பீஸ்ட்’ ஆட்டம் ஆரம்பம்... நெல்சன் வெளியிட்ட போட்டோவுக்கு பின்னணியில் இப்படி ஒரு அப்டேட் ஒளிஞ்சிருக்கா?

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.

vijays Beast movie First Single update
Author
Tamil Nadu, First Published Nov 28, 2021, 7:50 PM IST

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் படம் கடந்த மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடித்துள்ளனர். மேலும் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

vijays Beast movie First Single update

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 100-வது நாளை எட்டியுள்ளதை கொண்டாடும் விதமாக பீஸ்ட் படத்தின் புகைப்படம் ஒன்றை இயக்குனர் நெல்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் உள்பட அனைவரும் இசைக்கருவிகளை வாசித்தவாறும், நடிகை பூஜா ஹெக்டே பாட்டுப் பாடியவாறும் இருக்கிறார்.

vijays Beast movie First Single update

பீஸ்ட் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளதை சூசகமாக தெரிவிக்கும் விதமாக இந்த புகைப்படத்தை நெல்சன் வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுதவிர #BeastFirstSingle என்கிற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios